புதினங்களின் சங்கமம்

முன்னாள் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் கொலை செய்யப்பட்டாரா? அவருடன் காரில் இருந்த பெண் தலை மறைவா?

முன்னாள் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகவும் வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகமாகவும் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற ஜோன்குயின்ரஸ் (வயது-60) அவர்கள் (வலயக்கல்விப் பணிப்பாளர் (கிளிநொச்சி, மடு, தீவகம்),முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் (கிளிநொச்சி, மடு, தீவகம்) கடந்த திங்கட்கிழமை மன்னார்- யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்,

அவர் மாரடைப்பில் உயிரிழந்தார் என கூறப்பட்டிருந்தாலும் அவரது மரணத்தில் கடும் சந்தேகம் நிலவி வருகின்றது. அவரது முகத்தில் காணப்படும் காயங்கள் மற்றும் ஆடைகளில் காணப்படும் மணல் துணிக்கைகள் போன்றவை கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருடன் பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றும் பெண் ஒருவரும் சென்றிருந்தாகவும் இலுப்பைக்கடவைப் பொலிசார் அந்தப் பெண்ணை விசாரணை செய்ய முற்பட்ட போது குறித்த பெண் கெஞ்சி மன்றாடி தன்னை விசாரணை செய்ய வேண்டா்ம் என அழுததாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளார்கள்.

குயின்ரஸ் சென்ற கார் குறித்த பாம்புக் கோவிலுக்கு செல்லும் பாதையின் ஒதுக்குப் புறத்தில் புதைந்துள்ளது. ஏன் குயின்ரஸ் ஒதுக்குப் புறத்திற்கு காரைக் கொண்டு சென்றார் என்ற மர்மம் நீடிக்கின்றது. யாராவது குயின்ரஸ் மற்றும் அவருடன் காரில் இருந்த பெண்ணையும் அப்பகுதிக்கு கடத்திச் சென்றிருக்காலம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குயின்ரல் குறித்த கோவில் வாசல் அருகில் எங்கிருந்தோ இழுத்துக் கொண்டு வரப்பட்டு போடப்பட்டது போல அவரது சப்பாந்தும் கழன்ற நிலையில் காணப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவைப் பொலிசார் தகவல்கள் ஏதும் வெளியிடாது மௌனம் காத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

No photo description available.