ஊரடங்கு வேளையில் பரந்தனில் இனம்தெரியாத கும்பல் வீடுபுகுந்து கொள்ளை!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடுதழுவியதாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் நேற்று இரவு பரந்தனில் இனம்தெரியாத கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் நகை, பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று (மே-6) இரவு 10.30 மணிக்கு உள்நுழைந்த இனம்தெரியாத கும்பல் ஒன்று வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து நொருக்கியுள்ளதுடன் அங்கிருந்தவர்களை மிரட்டி நகை, பணம் என்பவற்றையயும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இச்சமூக விரோதிகளின் வன்முறையில் வீட்டில் இருந்த பெறுமதிவாய்ந்த பொருட்கள், தொலைக்காட்சி, வாகனம், மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் உள்ளிட்டவை அடித்து உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

