வடக்கு மாகாண ஆளுநரின் அதிகாரிகளின் மீற்றிங்குகளில் NPP கட்சி உறுப்பினர்களா? அதிகாரிகள் சிலர் கடும் கொதிப்பு!!
வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில், வடக்கு மாகாண கல்வி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கிடையில் நடக்கும் கூட்டங்களில் NPP கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்வது வடக்கு மாகாண உயர் அதிகாரிகள் பலரிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு மாகாண சபையில் கடமையாற்றும் சில சட்டம் பயின்ற அதிகாரிகள் இது தொடர்பாக ஏனைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வடக்கு மாகாண ஆளுநரால் அதிகாரிகளுக்கு நடாத்தப்படும் கூடங்களில் கட்சி உறுப்பினர்கள் வரமுடியாது என்றும் ஏனைய மாகாணங்களில் இவ்வாறான நடமுறைகள் காணப்படுவதில்லை என்பதுடன் முன்னைய மாகாணசபை காலத்தில் கூட இவ்வாான செயற்பாடுகள் காணப்படவில்லை எனவும் கூறி வருவதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக பாராளுமன்றில் கதைப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தொடர்பு கொண்டுள்ளார்களாம் குறித்த அதிகாரிகள். ஆளுநரின் சில கூட்டங்களில் NPP கட்சியைச் சேர்ந்த முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியரும் NPP கட்சியின் உறுப்பினருமான கபிலன் மற்றும் கிளிநொச்சி NPP கட்சி உறுப்பினர்கள் சிலர் அதிகாரிகளுக்கான கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


