முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அதிகாரம் படைத்தவர்களின் சீடர்கள் 100
இற்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்தவர்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
மகிந்த கூட்டத்தினர் மகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பினை பற்றி பேசுவதாகவும், ஆட்சி
அதிகாரம் அவர்கள் கைகளில் இருந்த போது , அதிகாரம் படைத்தவர்களின் சீடர்கள் 100-கும்
மேற்பட்ட பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொண்டாட்டங்களை நடத்திய போது ஆட்சியில்
இருந்தவர்கள் மெளனமாக இருந்ததாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
அதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருந்து வந்த பெண்களும் இப் பிரச்சனையினை
எதிர்கொண்டதாகவும் சஜித் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தங்காலையில் வெளிநாட்டு தம்பதியினருக்கு பிரதேச சபை முக்கியஸ்தர் இழைத்த குற்றத்தை இந்த
நாட்டு மக்கள் மாத்திரமல்ல முழு உலகமும் அறிந்தது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க
தவறியவர்கள் எதிர்காலத்தில் பெண்களை எப்படி பாதுகாப்பார்கள் எனவும் சஜித் கேள்வி
எழுப்பியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் மகளிர் நிகழ்வில் பேசிய கோத்தாபய ராஜபக்ச “பெண்கள், குழந்தைகளை
கவனிக்க வேண்டும்” என்றும், மஹிந்த ராஜபக்ச “தனது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக
இருந்தனர்” எனவும் தெரிவித்த கருத்துக்கள் தொட்பிலேயே சஜித் இதனை தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.





