புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முக்கிய கல்வி அதிகாரி மர்மமான முறையில் மரணம்!

முன்னாள் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகவும் வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகமாகவும் பணியாற்றி வந்த ஜோன்குயின்ரஸ் (வயது-60) அவர்கள் (வலயக்கல்விப் பணிப்பாளர் (கிளிநொச்சி, மடு, தீவகம்),முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் (கிளிநொச்சி, மடு, தீவகம்)  உயிரிழந்துள்ளார்.

மன்னார்- யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது.சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் சடலத்தை பார்வையிட்டனர்.

பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

May be an image of grass