புதினங்களின் சங்கமம்

யாழில் முக்கிய ரவுடியும் பலரின் அடியாளாகவும் தொழிற்பட்ட பச்சை பொறுக்கி பீத்தாண்டி கைது!! நடந்தது என்ன?

நல்லுார் பிரதேசசபையின் தவிசாளராகவும் முக்கிய காவாலியாகவும் செயற்படும் மயூரனின் பிரதான கையாளான பீத்தாண்டி என்பவன் புலனாய்வுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த பீத்தாண்டி மீற்றர் வட்டிக்கு கொடுக்கும் செல்லா ஹோட்ல் உரிமையாளரின் அடியாளாகவும் செயற்பட்டு வட்டி கொடுக்காதவர்களை வீடு புகுந்து தாக்கியும் வந்துள்ளான்.

யாழ் போண்டாவில் பகுதியில் இளைஞன் ஒருவரை வீட்டார் முன் நிலையில் நிர்வாணமாக தாக்கிய சம்பவத்தில் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த குறித்த பீத்தாண்டி என அழைக்கப்படும் கொக்குவில் பகுதியை சேர்ந்த பிரசாந் இந்தக் காவாலியை இன்று புதன்கிழமை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வருட இறுதியில் கோண்டாவில் உள்ள வீடு ஒன்றில் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர் குழு ஒன்று வீட்டார் முன்னிலையில் இளைஞன் ஒருவரை நிர்மாணமாக தாக்கி காயப்படுத்தியது.

குறித்த சம்பவம் தொடர்பில் நான்குக்கு மேற்பட்ட காவாலிகளை கோப்பாய் பொலிசார் கைது செய்த நிலையில் அதில் பிரதான சந்தேக நபரான பீத்தாண்டி தலைமறைவாக இருந்தான்.

பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பி.ஏ ஆன பொலிஸ் சார்ஜன் சுபசிங்கவின் ன் நெருங்கிய தொடர்பில் இருந்த பீத்தாண்டியை கைது செய்ய விடாமல் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வந்தது.

கொள்ளையர்கள், ரவுடிகள், போதைப்பொருள் விநியோகத்தர்களுன் தொடர்பில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பி.ஏ பொலிஸ் சார்ஜன் சுபசிங்க

இன் நிலையில் யாழில் உள்ள தனியார் மருத்துவமனையில் குறித்த பிரதான சந்தேக நபர் நிற்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்ட நிலையில் இவன் ஆயத்தமான போதே கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது.

குறித்த சந்தேக நபரை கைது செய்யும்போது கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உயர் மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்த நிலையில் அதனையும் பொறுப்பெடுத்தாது குறித்த நபரை கைது செய்து உள்ளார்.

கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண NPP அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் யாழ்ப்பாண NPP பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு முன் பொலிஸ் தரப்பில் உள்ள ரவுடிகளுக்கு ஆதரவானவர்களுக்கு நடவடிக்கை எடுப்பது அவசியம் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நல்லுார் பிரதேசசபை தவிசாளரான காவாலி மயுரனுடன் பீத்தாண்டி

May be an image of text

பீத்தாண்டியின் பீதாம்பரம்