புதினங்களின் சங்கமம்

இறப்பர் தொழிற்சாலையில் இயந்திரம் வெடித்ததில் இளைஞன் பலி – எட்டியாந்தோட்டையில் சம்பவம்! Video

எட்டியாந்தோட்டை கிரிப்போருவ தோட்டத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில், இன்று (02.11.2025) காலை 8 மணியளவில் நிகழ்ந்த துயரமான விபத்தில், 25 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இன்று காலை 8 மணியளவில், இறப்பர் பாலுடன் இரசாயனப் பொருட்களைக் கலவை செய்யும் (களஞ்சியம் செய்யும்) இயந்திரம் ஒன்று எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வெடிப்பின் தாக்கம் காரணமாக, இயந்திரத்தின் அருகில் பணியில் இருந்த குறித்த இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.