பளை வைத்திய அதிகாரி சிவரூபன் மட்டக்களப்பு காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டார்!!
கிளிநொச்சி பாளையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் சிவரூபனை பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் வைத்தியர் சிவரூபன் தெரிவித்ததாக கூறி வடபகுதியில் ஆயுதங்கள் பல மீட்கப்பட்ட நிலையில் தற்போது அவரை மட்டக்களப்பிற்கு கொண்டு சென்றுள்ளமை ஆயுதங்களை மீட்பதற்காகவே என கூறப்படுகிறது.
வைத்தியர் சிவரூபனுடன் சென்ற பாதுகாப்பு படையினர் கொக்கட்டிச்சோலை காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
இருந்தும் மட்டக்களப்பிற்கு சிவரூபன் அழைத்து செல்லப்பட்டுள்ளதால் விடுதலை புலிகள் மீள் உருவாக்கம் என்ற பெயரில் கிழக்கில் பலர் கைது செய்யப்பட போகிறார்கள் என்பதை கட்டியங் கூறி நிற்கிறது.

