செவ்வந்தி தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பிலிருந்து கிளிநொச்சி வந்த பொலிசாருக்கு சிக்கிய கஞ்சா!!
கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த குழுவினர் கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து பொதிகளில் பொதி செய்யப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்,
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தங்கி இருந்தமை தொடர்பு விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த குழுவினர் இன்று 24-10-2025) மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் இருந்து மேற்படி கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சான்று பொருட்களும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

