புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

நீங்கள் மட்டும் அடிக்கடி அவுஸ்திரேலியாவுக்கு போறீங்க. எங்களுக்கும் சொல்லுங்கோ என்று கேட்பவர்களுக்கானது…..

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்
Bridging Research to Policy என்ற கடந்த தடவை நான் பங்குபற்றிய குறுகிய கால பயிற்சி நெறிக்கான (Australia Awards Short course) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கொள்கைமுடிவுகளை (policy decision) எடுக்கும்போது எழுந்தமானமாக இல்லாமல் தரவுகள் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் எடுப்பதென்பது அவசியமானது. இலங்கையில் இவற்றிற்கிடையிலான இடைவெளியை நிரப்பும் நோக்குடன் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த Australia Awards இன் குறுகியகால பயிற்சி மூன்று பகுதிகளைக் கொண்டது (விபரம் கீழே இணைப்பாக). அதில் இரண்டு கிழமை அவுஸ்திரேலியாவின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறும். அதை அவுஸ்திரேலியாவின் ஏதாவதொரு முன்னணிப் பல்கலைக்கழகம் பொறுப்பேற்று நடாத்தும்.
நன்மைகள்
1. முழுமையான பயிற்சிகளிற்குமான தங்குமிட, உணவு, போக்குவரத்துக் கொடுப்பனவு / வசதிகள்
2. அவுஸ்திரேலியாவில் செலவுகளிற்கான கொடுப்பனவு
3. அவுஸ்திரேலியாவின் முன்னணிப் பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டு வாரங்கள் கற்கும் வாய்ப்பு மற்றும் பெறுமதியான சான்றிதழ்
4. இதனால் ஏற்படும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவின் வல்லுனர்கள் உடனான தொடர்பு
5. பல்வேறு அவுஸ்திரேலிய அரச, தனியார், அரச சார்பற்ற நிறுவனங்களள் மற்றும் அவர்களின் செயற்பாடுகளை நேரடியாக கண்டறியும் வாய்ப்பு
இதைவிட நீங்கள் சந்தோஷமாக அவுஸ்திரேலியாவை கிடைக்கும் நேரத்தில் சுற்றிப் பார்க்கலாம் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
இலங்கையிலிருந்து 20 பேரை தெரிவு செய்வார்கள். திறமை அடிப்படையில்.
அதற்கு நீங்கள் முதலில் நிகழ்நிலை விண்ணப்பத்தை வரும் கார்த்திகை 16ம் திகதிக்கு முன் நிரப்பி அனுப்ப வேண்டும்.
அரச, தனியார், அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றும் யாரும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நீங்கள் எவ்வாறு கொள்கை வகுப்பில் தாக்கம் செலுத்துவீர்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படும். அது நீங்கள் பணிபுரியும் இடத்திலாகவும் இருக்கலாம்.
அத்துடன் பயிற்சியின் பின்னர் என்ன திட்டத்தை செயல்படுத்த உள்ளீர்கள் என்பதும் முக்கியமானது. IELTS/TOEFL தேவையில்லை. ஆனால் கணிசமான ஆங்கில அறிவு இல்லாமல் முழுமையான பலனைப் பெற முடியாது.
கடந்த தடவை தமிழ் மொழி பேசுவோர் மூவர் இருந்தோம். திறமை மற்றும் முன்வைக்கும் திட்டத்தின் அடிப்படையில் மாத்திரமே தெரிவு நடைபெறும் என்பதால் முயற்சி செய்யுங்கள். வென்றால் மகிழ்ச்சி.
May be an image of text that says "ご続り Australia AustraliaAwards Awards Apply now Australia Awards -Sri Lanka Short Course on Bridging Research To Policy 2 Are you an emerging leader who holds a strategic role in policy development in Sri Lanka? This Short Course is offered up to 20 participants and invites applications from the public, private and non-government sectors. Apply by 16 November 2025 at 5:00 SLST"May be an image of text that says "を森り ንሔርግኒረልስስ Australia Awards Apply now Australia Awards- -Sri Lanka Short Course on Bridging Research To Policy 2 Are you an emerging leader who holds development Sri Lanka? Do you want strategic role in policy improve policy making? enhance your ability to leverage research to Australia Awards will offer a place short course the second iteration of this lp to 20 participants, and invites ap pplications from the public, private and non -government sectors. For more information on the short Course, Please visit the Australia Awards Sri Lanka website: 2025/ ts///a.sa.alaoobo/otio Apply by 16 November 2025 at 5:00pm SLST"May be an image of text that says "The course will be delivered in three components between February and April 2026. Preliminary Activities: 2-3 18 February 2026 days from 16- Core Learning Elements (in- (in-Australia): 2- 13 March 2026 Applied Learning Activity: 2-3days from 27-29 April 2026 All dates and locations are tentative, and more information will be be provided at the time of of selection."May be an image of textMay be an image of one or more people, dais and textNo photo description available.May be an image of Buckingham Fountain, skyscraper and text