முல்லைத்தீவிலிருந்து சென்ற டொல்பின் வான் அதிகாலையில் கோர விபத்து; 4 போ் பலி; நால்வர் காயம்! வீடியோ
அனுராதபுரம் – குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் இன்று (25) அதிகாலை நடந்த வீதி விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த 4 இளைஞர்கள் #உயிரிழந்த்துள்ளனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் இருந்து பயணித்த வேன் ஒன்றே இந்த விபத்தில் சிக்கி இருந்தது.
விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி மற்றும் லொறியின் சாரதி உட்பட 7 பேர் சிகிச்சைக்காக தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, வேனில் பயணித்த 4 பேர் #உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
#உயிரிழந்தவர்களாக முல்லைத்தீவு,செம்மலை பகுதியை சேர்ந்த தி.விமலானந்தன் (வயது -38) மற்றும்
புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது-31) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது-25) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேனுயன் (வயது-25) என்ற 4 இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த வேனில் பயணித்த ஏனைய இருவரின் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



