புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் பெண் றிப்போட்டர் சுமித்தியிடம் கேம் கேட்ட அந்த வெங்காயம் யாருடா? வீடியோ

சுமார் 15 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றும் சுமித்தி தங்கராசா பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி துணிவாகப் பணியாற்றிவரும் சிறந்த பெண் ஊடகவியலாளராவார்….. ”பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு அஞ்சாது” என்பது போல் சுமித்தி எந்தவொரு பன்னாடைகளின் அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் துணிவாக களத்தில் நிற்கும் ஒரு பெண் ஆவார். சுமித்த மட்டுமல்ல யாழில் உள்ள பல ஊடகவியலாளர்கள் பனங்காட்டு நரிகள் போலவே எந்தச் சலசலப்புகளுக்கும் அஞ்சாமல் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக சிவசேனை அமைப்பினரால் திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற யாழ். பெண் ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசாவை, வெங்காயம் ஒன்று  பகிரங்கமாக அச்சுறுத்திய காட்சி.​