புதினங்களின் சங்கமம்

கசிப்பு விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் பூநகரி சகுந்தலா!!

பூநகரி சாமிபுலம் நல்லூர் பகுதியில் வசிக்கும் தேவராசா சகுந்தலா என்பவர் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார்.

குறித்த பெண்ணிடம் இருந்து முக்கொம்பன், ஆலங்கேணி, பூநகரி, சாமிப்புலம் போன்ற பல பகுதிகளில் வசிப்பவர்கள் கசிப்பினை பெற்று அருந்தி வருகின்றனர்.

இது தொடர்பில் வாடியடி பொலிஸாரிடம் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் 100 பேரிடம் கையொப்பங்கள் பெற்று குறித்த செயற்பாட்டை தடுத்துநிறுத்துவதற்கான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

எனினும் வாடியடி பொலிஸாரும் குறித்த பெண்ணிற்கு சார்பாக செயற்பட்டு வருகின்றனர் என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பாக மேலதிகாரிகள் தகுந்த சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

இது போன்ற குற்றச் செய்திகளை எமக்கு ஆதாரங்களுடன் அனுப்பிவைக்கும் பட்சத்தில் அவை பிரசுரிக்கப்படும்.