இந்தியச் செய்திகள்

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை !! நடிகர் விஜய் செய்துள்ள செயல்!!

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வீடியோ வெளியானதும் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் முக்கியஸ்தர், மற்றும் பல முக்கிய பிரமுகர் தங்கள் கண்டனங்களை பதிவிட்டிருந்தனர்.

இருந்தும் தமிழ் சினிமா பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை வெளியிட்ட நிலையில், பல சமூக பிரச்சனைகளுக்கு எந்தவித ஆர்ப்பாட்டமின்றி குரல் கொடுத்ததுடன் பலருக்கு உதவி வந்தார் நடிகர் விஜய்.

அப்படியிருந்தும் அவரின் பிரபலம் காரணமாகவும், அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பதாலும் அவர் செய்யும் உதவிகள் உடனுக்குடன் வெளிவந்து விடுகிறது. இருந்தும் அப்படி என்னவென்று வெளிவரும் என விமர்ச்சிப்பவர்களும் உண்டு.

இந்நிலையில் இந்த விமர்சனங்களை இனம்கண்ட விஜய் பொள்ளாச்சி விவகாரத்தில் இன்னும் ரகசியமாக ஒரு செயலை செய்துள்ளார்.

அதாவது பொள்ளாச்சியில் இருக்கும் தனது நற்பணி மன்ற அமைப்பாளரை அழைத்து பொள்ளாச்சில் பாதிக்கப்பட்டு முறைப்பாடு செய்ய வெளிவந்த பெண்களையும் அவரது குடும்பத்தையும் சந்தித்து தனது ஆறுதலை கூறி அவர்களின் துயரில் பங்கெடுத்ததுடன், இப்படியானவர்களை சும்மா விடக்கூடாது நீங்கள் தைரியமாக இந்த விடயத்தை கையாளுங்கள் நாங்கள் இருக்கிறோம், உங்களின் பாதுகாப்பிற்காக எனது நற்பணி மன்ற நிர்வாகிகள் உங்களுடன் உறுதுணையாக இருப்பார்கள் எனக்கூறி சுமார் 10 இலட்சம் ரொக்க பணத்தையும் வழங்கியிருந்தார் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.