புதினங்களின் சங்கமம்

யாழ் கொழும்பு பேரூந்தில் பயணி ஒருவருக்கு நடந்த கேவலம்!! அவதானம் பயணிகளே!!

பேருந்தில் தமிழ்ப்பாடல் ஒலிபரப்பும்படி கேட்ட பயணியை நடுவழியில் இறக்கி விட்டுள்ளனர் அந்த பேருந்தின் சாரதியும், நடத்தனரும். மிருசுவில், உசன் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து ஹம்பாந்தோட்டை சென்ற தனியார் பேருந்தில் சிங்களப்பாடல் ஒலிக்க விடப்பட்டிருந்தது. அதில் பயணித்த பயணியொருவர், தமிழ்பாடலை ஒலிக்கவிடும்படி கேட்டுள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த சாரதியும், நடத்துனரும் அந்த பயணியுடன் முரண்பட்டுள்ளனர். பயணியும் பதிலுக்கு மறுக, பேருந்திற்குள் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாகவும், இதனால் பயணியை நடுவழியில் சாரதியும், நடத்தனரும் இறக்கி விடப்பட்டதாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும், தமிழ்ப்பாடல் கேட்டவர் தமது நகை, பணத்தை அபேஸ் செய்துவிட்டார் என சாரதியும், நடத்துனரும் கொடிகாமம் பொலிசில் முறையிட்டனர்.

இதையடுத்து குறித்த பயணி கொடிகாமம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். வழக்கை ஆராய்ந்த நீதிவான், பயணியை இரண்டரை இலட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார்.