கிளிநொச்சியில் இரண்டு தனியார் கல்வி நிலையங்களுகிடையே மோதல்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
கிளிநொச்சி நகரத்தில் இயங்கி வருகின்ற இரண்டு தனியார் கல்வி நிலையங்களுக்கிடையே இன்று(10) மாலை மோதல் இடம்பெற்றுள்ளது.
சில மாணவர்கள் இதுவரை காலமும் புவியியல் பாடம் ஒன்றுக்கு ஒரு தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுவந்த நிலையில் அவர்கள் திடீரென குறித்த பாடத்திற்கு அங்கிருந்து விலகி வேறொரு கல்வி நிலையத்திற்கு சென்றிருக்கின்றனர்.
இதன் காரணமாக இரண்டு கல்வி நிலையத்தினருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ஒரு சில மாணவர்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். எனவே இது தொடர்பில் புதிதாக மாணவர்கள் சென்ற கல்வி நிலையத்தினர் மற்றும் தாக்குதலுக்குள்ளான மாணவர்களின் பெற்றோர் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மீனும், கறுவாடும், இறைச்சியும், கத்தரிக்காயும், புடலங்காயும் விற்பனை செய்வதில் மட்டுமல்ல போட்டியும், பொறாமையும் அடித்தடியும் புவியியலையும், பௌதீகவியலையும், இராசயனவியலையும், தமிழையும், கணக்கியலையும், விற்பனை செய்வதிலும்தான்

