புதினங்களின் சங்கமம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் மகேந்தி தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!

முன்னாள் போராளி மகேந்தி என்பவர் பலா மரத்தில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 55 வயதுடைய இராமப்பிள்ளை கமலராசா (மகேந்தி) என்பவர் அவரது வீட்டுக்கு முன்பாகவுள்ள பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இந்தியப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றதுடன் பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்