புதினங்களின் சங்கமம்

யாழில் 30 வயதான ஜெயக்குமார் திடீரென மரணம்!!

இன்றைய தினம் (30) இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – கலட்டி பகுதியைச் சேர்ந்த நடராசா ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் இன்று காலை உடல் சுகயீனம் காரணமாக படுத்திருந்தார். இந்நிலையில் அவர் அசைவற்று காணப்பட்டதால் குடும்பத்தினர் அவரை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.