புதினங்களின் சங்கமம்

“கழுதையே. உன்னை இல்லாமல் ஆகிவிடுவேன்” என கூறி 2015ல் பதிவியை விட்டு துரத்திய ரணிலை சிறைக்கு அனுப்பிய அந்த கெட்ட பயல் யார்?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்… 

“தொலைந்து விடு, கழுதையே. உன்னை இல்லாமல் ஆகிவிடுவேன்” – இவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015-ல், மத்திய வங்கி பிணை மோசடியை விசாரித்த CID இயக்குநர் ஷானி அபேசேகரக்கு கூறிய வார்த்தைகள்.

பின்னால், ஷானி அபேசேகர சில போலிக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சுமார் ஒரு வருடம் மறியலில் இருந்தார்.

சரியாக 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஓய்வு பெற்ற ஷானி, இன்று CID இயக்குனராக மீண்டும் நியமிக்கப்பட்டு, ரணிலை மறியலுக்கு அனுப்பியுள்ளார்.


கெட்டபய சார் இந்த ஷானி!

ரணிலை கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பதில் நியாயம் இருந்தாலும், சமயங்களில் சட்டத்தின் ஆட்சியில் ரணில் சதுரங்கம் விளையாடியதை நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.

1988-களின் “பட்டலந்த” சித்தரவதை முகாம் போன்ற பழைய பைல்களை மறந்தாலும்,

இறுதியாக ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில்:

– உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்காமல் இழுத்தடித்தமை,

– தேர்தல்களை தாமதப்படுத்தியமை அல்லது தடுத்தமை,

– உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பாராளுமன்றத்தில் மறுபரிசீலனை செய்ய முயற்சித்தமை,

என சில உதாரணங்களை கூறலாம்

ரணில் ஒரு சட்டத்தரணியாக இருந்தும் இவ்வாறு செயற்பட்டது கவலைக்குரியது. இன்றும் கூட நீதிமன்றத்தில் காலுக்கு மேல் கால் போட்டு ரணில் இருந்தது, சட்டவாட்சியின் மீதும், நீதித்துறையின் மீதமுள்ள அவரது மனநிலையை வெளிப்படுத்துகிறது.

ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குச் செய்த சேவையை மதிக்கும் அதேவேளை, இந்த நிகழ்வை, எந்தத் தலைவரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்பதையும், ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சியை மதிப்பது கட்டாயம் என்பதையும் வலியுறுத்தும் தருணமாகவே பார்க்கப்பட வேண்டும்.

மற்றுமொரு சமூகவலைத்தளப் பதிவு 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்ற போது,
சுஜீவ சேனசிங்கவுக்கு அர்ஜுன் அலோசியஸ் 6 மில்லியன் ரூபா இலஞ்சமாக கொடுக்கிறார்.
இந்தப் பணம் சுஜீவவின் கணக்கில் வந்து சேர, அந்த நாட்களில் மத்திய வங்கி விவகாரம் பூதாகரமாக வெடிக்க
விசாரணை சீ.ஐ.டி பணிப்பாளர் ஷானி அபேசகரவின் பெயரில் எழுதப்படுகிறது.
புயல் வேகத்தில் விசாரணை இடம்பெற
ஒருகட்டத்தில் சுஜீவுக்கு 6 மில்லியன் கொடுத்ததற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஷானி தயாராகிறார்.
இரவு பேய் மரம் ஏறும் நேரம் பார்த்து
எமன், ரணில் உருவத்திலிருந்து
ஷானிக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது.
ஷானி உங்களை இப்போதே சந்திக்க வேண்டும் என்கிறார் ரணில்.
நாட்டின் பிரதமர் ஒருவர் அழைக்கும் போது ,எந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு முடியாது என கூற முடியும்?
ஷானி மின்னல் வேகத்தில் அலரி மாளிகைக்கு செல்கிறார்.
சுஜீவவை பற்றி நீதிமன்றத்தில் வாய் திறக்க வேண்டாம் என ரணில் ஷானிக்கு ஓடர் போடுகிறார்.
பின்னர் ஷானி,
சார். நான் ஏற்கனவே அந்தத் தகவலைக் கண்டுபிடித்து அதனை நீதிமன்றத்திற்குக் வெளிபடுத்துவதாக நான் உறுதியளித்துள்ளேன்.
இப்போது அதனை எனக்கு வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.
என்னை வற்புறுத்த வேண்டாம் எனக்கூறுகிறார் ஷானி.
“கழுதையே இங்கிருந்து போ..”
ரணில் பல்லைக் கடித்துக்கொண்டு ஷானியை கோபமாகத் திட்டி அனுப்பி விடுகிறார்.
(ஷானியே நேர்காணல் ஒன்றின் போது இதனை கூறியிருப்பார்)
அதன் பின்னர் ஷானிக்கு நடந்த அட்டூழியங்கள் நான் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது.
இப்படிதான் அதிகாரம் மாற மாற அனைத்து ஊழல் வழக்குகளையும் இழுத்து மூடியது இந்த ரணில்- ராஜபக்‌ஷ அரசு.
அது மட்டுமா திறமையான அதிகாரிகளையும் கர்ணக்கொடுரமாக பழிவாங்கியது.
இந்த இலட்சனத்தில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் நீதியை நிலை
நாட்டிக் கிழித்து இருப்பராம் ரணில்.
அப்போதே கூறினோம். திருடனை திருடனே சிறையில் அடைக்கப்பட்டான் என்று. ஜனாஸா எரிப்புக்கு நீதி கோரி வெள்ளைக்கொடி கட்டியவர் முதல் ஒட்டுமொத்த திருட்டு கும்பலும் நீதிமன்ற வளாகத்துக்குள்.
கழுதை எனக்கூறி வெளியே தள்ளிய ஷானி, இன்று உண்மையான திருடனை சிறையில் அடைத்து இருக்கிறார்.
இது அரசியல் பழிவாங்கலாக கருதினால் அது மடமையின் உச்சம்.
திறமையான அதிகாரிகளுக்கு சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு வழங்கி இருந்தால் 2015 வீட்டுக்கு அனுப்பட்ட ராஜபக்ஷ தரப்பு 2019 இல் அதிகாரத்துக்கு வந்து இருக்காது.
எது எப்படியோ கொக்குக்கு ஒரு காலம் என்றால் மீனுக்கும் காலம் என்ற கதை சானி அபேசேகரவுக்கு கன கச்சிதமாக பொருந்தும் ❤️