புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டது ஏன்?

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தர் ஒருவர் சக சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தரின் தொலைபேசியை பயன்படுத்தி நூதன முறையில் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தை நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் (20) சிறப்பு அதிரடிப் படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தர் நாளைய தினம் (21) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.