புதிய காதலனுடன் திருமணம்!! அதற்கு முதல் 3 நாட்கள் பழைய காதலனுடன் உல்லாசமாக இருந்த சிங்கள காதலி!!
காதலனனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த யுவதி திடீரென காணாமல் போனார். 3 நாட்களின் பின்னர் அவர் வீடு திரும்பியபோது, தனது திருமணம் பற்றி பழைய காதலனிடம் கூறச் சென்றதும், போன இடத்தில் பழைய காதலனுடன் 3 நாட்கள் தங்கியிருந்ததும் தெரிய வந்தது.
இந்த விவகாரம் பொலிஸ் நிலையம் வரை சென்று, இரண்டு காதலர்களும் அங்கு அழைக்கப்பட்டு, ஒருவருடன் திருமணம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சுவாரஸ்ய சம்பவம் புலத்சிங்கள பொலிஸ் பிரிவில் இடம்பெற்றது.
புலத்சிங்களவை வசிப்பிடமாகக் கொண்ட 23 வயதான யுவதியொருவர் 24 வயதான இளைஞனை காதலித்த வந்துள்ளார். பின்னர் அந்த உறவை முறித்துக் கொண்டு, 27 வயதான மற்றொரு இளைஞனை காதலித்துள்ளார்.
இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தனது புதிய காதலனை திருமணம் செய்து கொள்வது பற்றி தனது பழைய காதலனிடம் தெரிவிப்பதற்கக சென்ற யுவதி, அவருடன் 3 நாட்களாக அவனுடன் தங்கியிருந்துள்ளார்.
தனது மகளை காணவில்லையென தாயார் புலத்சிங்கல பொலிஸில் நேற்று முறைப்பாடு செய்தார். பொலிசார் மேற்கொண் விசாரணையிலேயே இந்த தகவல்கள் வெளிப்பட்டன.
தாயாரின் முறைப்பாட்டையடுத்து, யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயங்கள் வெளிப்பட்டன. இதையடுத்து, இரண்டு காதலர்களும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டனர். நீண்ட விசாரணையின் பின்னர், புதிய காதலனை ஏற்றுக்கொள்ள யுவதி விருப்பம் தெரிவித்ததையடுத்து சம்பவம் சமரசம் ஆனதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.