யாழ் மாநகரசபையில் பல்வேறு தேவைகளின் நிமிர்த்தம் பணம் கட்டச் செல்பவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளார்கள். மாநகரசபையின் முன்னணி அலுவலமாக ( Front office) செயற்படும் பகுதி ஒன்று பருத்தித்துறை வீதியை நோக்கியவாறு மாநகரசபை வாயில் பகுதியில் அமைந்துள்ளது. குறித்த அலுவலகத்திலேயே மக்கள் பல்வேறு தேவைகளுக்காக பணம் கட்டி பற்றுச்சீட்டைப் பெறுவது வழக்கம். ஆனால் அந்தப்பகுதியில் ஊழியர்கள் காணப்படுவதில்லை என்றும் அதனால் அவர்கள் வரும்வரை மக்கள் காத்திருக்க கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். நேற்று முன்தினம் அந்த பகுதியில் ஒரு அலுவலர் கூட இல்லாது காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பாக யாழ் மாநகரசபை மேயர் நடவடி்ககை எடுப்பாரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Home புதினங்களின் சங்கமம் யாழ் மாநகரசபைக்கு பல்வேறு தேவைகளுக்காக பணம் செலுத்தச் செல்பவர்கள் திண்டாட்டம்! ஊழியர்கள் எங்கே?





