புதினங்களின் சங்கமம்

யாழிலிருந்து களவாக இந்தியாவுக்கு படகில் சென்ற வினோத்குமாரும் சிந்துஜனும் பிடிபட்டது எப்படி?

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிந்துஜன் ஆகிய இரு இளைஞர்கள், படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து பைபர் படகு ஒன்றில் வந்த இவர்களின் படகு பழுதாகி நின்றபோது, அவ்வழியே வந்த ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்களால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இரு இளைஞர்களையும் கைது செய்த வேதாரண்யம் கடலோர காவல் குழு பொலிசார், அவர்கள் மீன்பிடிக்க வந்தனரா அல்லது கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
May be an image of fishing and boat