எனது வீட்டை சுற்றி தேடுதல் நடாத்தவும்!! பயத்தில் அலறி இராணுவத்துக்கு தெரிவித்த சிறிதரன்!!
கூட்டமைப்பு உறுப்பினா்கள் அரச ஒட்டுக்குழுவாக மாறியுள்ள நிலையில் புலிகளின் ஆதரவாளர்களால் தமது உயிருக்கு ஆபத்து நேரும் என அஞ்சிவருகின்றனர். இந் நிலையில் சிறிதரனும் கடுமையான அச்சத்துடன் இருப்பதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் சிறிதரனின் வீட்டுக்கு அருகில் இராணுவம் தேடுதல் நடாத்தியுள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. தனக்கு ஆபத்து இருக்கும் என்று அஞ்சி சிறிதரனே இராணுவத்துக்கு தெரிவித்துவிட்டு இவ்வாறான பல தில்லாலங்கடி வேலைகளை செய்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சிறிதரன் வெளிதோற்றத்தில் புலி போல இருந்தாலும் பல புலிகளை காட்டிக் கொடுக்கும் வேலைகளைச் செய்து வருவது புலி ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை உண்டுபண்ணியுள்ளதாகவும் மக்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். இதே வேளை தமிழ்வின் இணையத்தளத்திற்கு இராணுவம் வரப்போகின்றது என ஏற்கனவே அறிவித்துவிட்டு தனது ஊடகவியலாளர் ஒருவரையும் அங்கு நிறுத்திவிட்டே சிறிதரன் இந்த திருவிளையாடலைப் புரிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

