புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் கனேஷ் கனடாவில் மரணம்!!

கனடாவில் நெல்லியடியைச் சேர்ந்த
இளம் பொறியியலாளர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை நேற்றுமுன்தினம்
ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார் .

நெல்லியடி வதிரி மாலை சந்தை வீதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் கணேஷகுமார் (பொறியியலாளர்)
வயது 44 என்ற இளம் குடும்பஸ்தர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இளைய சதோதரனும் விபரீத முடிவால்
உயிரிழந்தார்.

இவரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை கனடாவில் இடம்பறவுள்ளது.

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.