புதினங்களின் சங்கமம்

யாழ் புல்லுக்குளத்தில் மிதந்த சடலம் யாருடையது? Photos

இன்றைய தினம் (08) யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு அண்மையில் உள்ள குளத்தில் இருந்து ஆணொருவரது சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவர் வெள்ளை, சிவப்பு மற்றும் கறுப்பு ஆகிய வர்ணங்களிலான பெட்டி போட்ட சட்டையை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவரது துவிச்சக்கர வண்டி குளத்திற்கு வெளியே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை இனங்காட்டுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

May be an image of 1 person