புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் இளம் தாய் பசுபதியை நசுக்கி்க் கொன்ற காட்டு யானை!! வீடியோ

மட்டு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதிக்குள் நேற்றிரவு 7 மணியளவில் ஊடுருவிய காட்டுயானை ஒன்றினது தாக்குதலில் சிக்கி 38 வயது இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.
உயிரிழந்த பெண் மகிழவெட்டுவானைச் சேர்ந்த ரவிச்சந்திரன் பசுபதி (வயது 38) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது நேற்று இரவு 7.00 மணியளவில், குறித்த பகுதிக்குள் ஊடுருவிய காட்டு யானை பல வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தியதுன் மகிழவெட்டுவான் கிராமத்தின் நடு பகுதியான கற்குடா பகுதிக்குள் ஊடுருவிய போது அங்குள்ள வீடொன்றின் முற்றத்தில் தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் இருந்த தாயும் அவரது குழந்தையும் யானையைக் கண்டு வீட்டிற்குள் புகுந்த நிலையில் அவர்களை துரத்திச் சென்ற யானை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய நிலையில் குழந்தையை மீட்டதுடன், உயிரிழந்த தாயின் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அப் பகுதியில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
May be an image of 1 person, smiling and text that says "அமரர் வர்:பகுபதிரவீச்சந்தீரன் பசுபதி ரவிச்சந்திரன் அஞ்சலி Biw மனித வாழ்வில் மரணம் இயற்க்கை தான்! இயற்கையால் வந்தால் ஏற்கலாம் நீங்கள் வாழ வேண்டிய வயதில் வாழய மலராகி உதிர்ந்து போன உங்களை எப்பழ மறப்பது... கற்குடா அருள் முருகன் இந்து இளைஞர் மன்றம்"May be an image of 1 person and text that says "மண்ணுலகில் 1987 கண்ணீர் அஞ்சலில 06 விண்ணுலகில் 2025 05 Coa S00 A က MA 08 04 04 அமரர். பசுபதி ரவிச்சந்திரன் தகவல்- குடும்பத்தினர்"