Style

யாழில் கற்பழிக்கப்பட்ட பின் பெண் உறுப்பினுள் முள்ளுக்கம்பி சொருகி சித்திரவதை செய்யப்பட்ட கிருஷ்ணவேணியும் நண்பியும் தாயும்!! வம்பனின் புலனாய்வுத் தொடர் 10

1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னரும், கிருசாந்தி கொலைக்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை நாம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். அதன் 10 வது பகுதி இங்கு தரப்பட்டுள்ளது.

9ம்  பகுதியையும் கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்…..

யாழில் கணவனைக் கட்டி வைத்து அவன் முன் பலரால் கொடூர வல்லுறவுக்குள்ளான 23 வயது சுமதி!! கொதித்தெழுந்த நீதிபதி இளஞ்செழியன்!! வம்பனின் புலனாய்வுத் தொடர் 9

செம்மணிப் புதைகுழிகளுக்கு காரணமானவர்கள் என கருதப்பட்டு நீதிபதி இளஞ்செழியன் முன் நிறுத்தப்பட்ட 5 படையினரும் அதன் பின்னர் பல வழக்கு விசாரணைகளுக்கு வெலிக்கடைசிறைச்சாலையிலிருந்து  யாழ் நீதிமன்றத்திற்கு பல தடவைகள் ஆயர்ப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் பின்னர் வழக்கு உரிய முறையில் சென்று கொண்டிருந்த போது, செம்மணிப் புதைகுழி தோண்டும் பொறுப்பும் அதற்கு காரணமானவர்களைக் கண்டறிவதற்கான பொறுப்பும் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் நீதிபதி  இளஞ்செழியன் குறித்த புதைகுழி வழக்கை யாழ் நீதிவான் இ.விக்னராஜாவிடம் கையளித்துவிட்டு தனது கடமையை முடித்துக் கொண்டார்.

 ஆனையிறவு புலிகளிடம் வீழ்ச்சி, யாழ்ப்பாணம் புலிகளால் முற்றுகையிடப்பட்ட காரணங்களால் செம்மணி புதைகுழிக் குற்றவாளிகளை யாழ் நீதிமன்றில் ஆயர்ப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நீதிபதி விக்னராஜாவால் குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின் கொழும்பு நீதிமன்றம் அவர்களை சில காலங்களில் பிணையில் விடுவித்தது.

கிருசாந்தியும் அவளது தாய், தம்பி, அயலவன் ஆகியோர் உட்பட ஏராளமானவர்களைக் கொன்று குவித்த செம்மணி மனிதப் படுகொலைக்குக் காரணமானவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் தற்போதும் மிக சொகுசான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். குறித்த படை அதிகாரிகளின் தற்போதைய நிலையை 2015ம் ஆண்டு வெளி வந்த லங்கா ஈநியூஸ இணையத்தளம் அம்பலப்படுத்தியிருந்தது. குறிப்பாக சுமதியை கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி கொன்றவர்கள் தற்போது சிறையில் இல்லாது சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.  குறித்த இணையத்தளம் வெளியிட்ட தகவலை கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பார்வையிடலாம்.

For Whose Desire that Chemmani Mass Grave Case was Closed

செம்மணிப் புதைகுழிக்கு காரணமான படை அதிகாரிகளின் புகைப்படங்கள்

chemmani 2

கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் முழுமையாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குடாநாட்டில், 1983ம் ஆண்டின் பின்னர், 1996 ல் முதல் முதலாக சிங்கள இராணுவத்தின் முழுமையான கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. தென்மராட்சி, வடமராட்சியிலிரு்நது  மிகவும் அச்சத்துடனேயே செய்வதறியாத நிலையில் பொதுமக்கள் வலிகாமம் பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.

ஏனெனில் முன்னைய காலங்களில் தமிழர் பிரதேசங்களில் சிங்களப் படையினர் மேற்கொண்ட கொலை வெறித் தாக்குதல்கள்களையும் கொடூர வல்லுறவுகளையும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆனாலும் வலிகாமம் பகுதிக்குள் நாவற்குழிப் பகுதியால் அலை அலையாக நுழைந்து கொண்டிருந்த பொதுமக்களை நாவற்குழி அரிசி ஆலைப்பகுதியில் வரிசையாக மறித்து ஆவணங்கள் மற்றும் உடமைகளைப் பரிசோதித்து வலிகாமத்துக்குள் நுழைய விட்ட படையினர் குறித்த மக்களுக்கு உணவுப் பொதிகள் மற்றும் நீராகாரங்களை வழங்கி அனுப்பிய போது மக்களின் பயம் கொஞ்சம் குறைந்திருந்தது.

அதன் பின்னரும் தமது இருப்பிடங்களிலிருந்து பல்வேறு தேவைகளுக்காக வீதியால் செல்லும் போதும் படையினரின் உபசரிப்புக்கள் மற்றும் முகாம்கள் மூலம் படையினர் கொடுத்த உலர் உணவு நிவாரணங்கள் போன்றவற்றால் மக்கள் மத்தியில் படையினர் மீது காணப்பட்ட அச்சம் குறைந்திருந்தது.

புலிகளையும் மக்களையும் பிரிக்கும் அரசாங்கத்தின் இராஜ தந்திரங்களில் ஒன்றாக அந் நேரம் காணப்பட்ட குறித்த செயற்பாட்டை சிங்கள அரசு தொடர்ச்சியாக செய்திருந்தால் சில வேளை புலிகளை மக்கள் மறந்திருப்பார்கள்.

சிங்களப் பேரினவாத அரசு தனது அரக்க குணத்தை காட்டத் தொடங்கியது எப்போது?

யாழில் ஆங்காங்கே கைதுகள், காணாமல் போதல் என்பன மிகக் குறைவாக நடந்து கொண்டிருந்த போது 1996.04.07 யாழில் நிலைகொண்டிருந்த படையினர்களுக்கும் படை அதிகாரிகளுக்கும் பேரிடியைக் கொடுத்த சம்பவம் ஒன்று நடந்தது. யாழ் நகரப்பகுதியில் ஸ்ரான்லி வீதியில் பெண் தற்கொலைப் படைத் தாக்குதலில் யாழ் நகரத் தளபதியான பிரிகேடியர்  ஆனந்த ஹமங்கோடா உட்பட்ட11 படையினர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட மனித வேட்டை படையினரின் உண்மையான சொரூபத்தைக் காட்டி யாழ் குடாநாட்டு நிலையை தலைகீழாக்கியது.

நல்லுார் சங்கிலியன் வீதியில் நாதன் ஒட்டுத்தொழிற்சாலைக்கு எதிர்ப்புறமாக ஓரிரு வீடுகள் தள்ளியிருந்த வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்த  இளம் பெண் ஒருவரே குறித்த குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்ததாக கருதப்பட்டு அந்த வீடு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு குறித்த வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்த தனியார் வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்பப் பெண்ணான இளம் தாதி மற்றும் அவளது கணவன் குண்டு வெடிப்பு நடைபெற்று ஓரிரு வாரங்களில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்கள்.

இது தொடர்பாக 1996ம் ஆண்டு யூலை மாத நடுப்பகுதியில் வெளியாகிய தென்பகுதி ஆங்கில நாளிதழ் ஒன்று எவ்வாறு அப் பெண் படையினரின் பாதுகாப்பு வலயத்தை தாண்டி காவலரண்களை தவிர்த்து ஸ்ரான்லி வீதிவரை சென்றார் என்ற விபரத்தையும் குறித்த தற்கொலைத் தாக்குதல் தொடர்பான விபரங்களையும் தெளிவாக வெளியிட்டிருந்தது. அதனை நாம் இங்கு தந்துள்ளோம்.

நீல நிற ஸ்கூட்டரில் நல்லுார் பகுதியிலிருந்து 2 இளைஞர்களுடன் வந்த  35 வயது மதிக்கத்தக்க பெண் ஆரியகுளம் சந்தியில் உள்ள சோதனைச் சாவடி ஊடாகச் செல்லாது, அருகில் உள்ள ரயில் நிலையத்தின் ஒற்றையடிப் பாதை வழியாக மார்டின் வீதிக்குச் சென்று வேம்படி வீதியூடாகச் சென்று செப்பல் வீதியை அடைந்து அங்கிருந்து றீகல் தியேட்டர் வழியாக யாழ் நகரப்பகுதியை  அடைந்து பழைய மின்சார நிலைய வீதியூடாக ஸ்ரான்லி வீதிக்குச் செல்லும் பாதையால் ஸ்ரான்லி வீதிக்கு வந்து சேர்ந்ததாக குறித்த நாளிதழ் தகவலை வெளியிட்டிருந்தது.

அப்போதைய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சராக இருந்த நிமால்சிறிபாலடிசில்வா, யூலை 4ம் திகதி வியாழன் காலை 7.45 மணியளவில் கொழும்பிலிருந்து விமானத்தில் பலாலி வந்து, அங்கு குடாநாட்டுக் கட்டளைத் தளபதி ஸ்ரீலால் வீரசூரியவுடன் காலை உணவு அருந்திய பின், யாழ் நகருக்கு ஹெலி மூலமாக வந்திறங்கி, யாழ் நகரப் படைத்தளபதியின் வாகனத்தில் நாகவிகாரைக்குச் சென்று வணங்கிய பின்னர், திருக்குடும்ப கன்னியர்மடாலயத்திற்குச் சென்று, அங்கு வந்திருந்த பாடசாலை அதிபர்கள் பலருக்கு பாடசாலைப் புத்தகங்களை வழங்கியிருந்தார். அதன்  பின்னர், யாழ் ஸ்ரான்லி வீதியில், கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் (BMC) கிளையை திறந்து வைப்பதற்காக சென்ற சமயத்தில் அங்கு நின்ற  வெள்ளை ரவிக்கையுடன் கூடிய சாறி அணிந்திருந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், நிமால்சிறிபாலடிசில்வா மற்றும் அவரது பஜிரோ வாகனத்துக்கு அருகில் நின்ற யாழ் நகரக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஆனந்தஹமன்கொட ஆகியோரை நோக்கி சென்ற போது அவர்களுக்குப் பக்கத்தில் பாதுகாப்புக்காக நி்ன்றிருந்த இராணுவ கொமான்டோ ஒருவரால் நிறுத்தப்பட்ட போது குறித்த பெண் தனது குண்டை வெடிக்கச் செய்தார்.

இந்தக் குண்டு வெடிப்பில் பிரிகேடியர் ஆனந்த ஹமங்கோடா மற்றும் லங்கா சீமென்ட் தலைவர் ரஞ்சித் கொடமுன உட்பட 11 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். பல படை அதிகாரிகள் காயமடைந்தனர். இதன் பின்னர் அப்பகுதியில் நின்றிருந்த  இராணுவச் சிப்பாய்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி மற்றும் பவள் கவச வாகனத்தின் மூலமான 50 கலீபர் தா்க்குதல்களை மேற்கொண்ட போது யாழ் இந்துக்கல்லுாரி, சென்ஜோன்ஸ் கல்லுாரி மாணவர்கள், பிரபல வைத்திய அதிகாரி ஏபிரகாம் உட்பட 16 அப்பாவிப் பொதுமக்கள் பலியானதுடன் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். யாழ்ப்பாணம் படையினரால் கைப்பற்றப்பட்ட பின் நடந்த பாரிய ஒரு சம்பவம் இதுவாகும்.

ஸ்ரான்லி வீதி தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் அங்கு வைத்து  படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட16 பொதுமக்களில்  சென்ஜோன் கல்லுாரி மாணவன் நவரட்ணசிங்கம் சுகந்தனும் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் விக்ணேஸ்வரன் ரமேசும்

No photo description available.May be an image of 1 person

தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பெண் 1983ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது கொழும்பில் வைத்து அவளது காதலனுக்கு முன் சிங்களக் காடையர்கள் பலரால் கற்பழிக்கப்பட்டவள் எனவும் அவளது காதலனை அவளுக்கு முன் காடையர்கள் வெட்டிக் கொலை செய்திருந்தனர் எனவும் அந்தக் காலத்தில் பரவலாக கதைகள் எழுந்திருந்தன. ஆனால் அவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை. 

இந்தத் தாக்குதல் குடாநாட்டையும் பொதுமக்களையும்  தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சந்தோசத்தில் காணப்பட்ட சந்திரிக்கா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்தரத்வத்தை போன்றவர்களுக்கும் படைத்தரப்புக்கும் பாரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இச் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இராணுவத்தரப்பு மீள்வதற்கு முன் யூலை 17ம் திகதி முல்லைத்தீவு இராணுவ முகாம் நிர்மூலமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான ஆயுதங்களும் புலிகளால் அள்ளிச் செல்லப்பட்டன. இதன் பின்னரே குடாநாட்டு மக்களுக்கு தனது அரக்க கோரைப் பற்களை காட்டத் தொடங்கியது இராணுவம்……

அதன் பின்னர் யாழ் கட்டளைத்தளபதியாக செயற்பட்ட பிரிகேடியராக காமினிஜெயசுந்தரவின் கீழ் செயற்பட்ட படை அதிகாரிகளாலேயே பல பெண்கள் வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டனர். 04.07.1996 அன்றே தனது கோர முகத்தை காட்டியது இராணுவம்.

04.07.1996 அன்று மதியம் ஒரு மணிக்கு யாழினிக்கும் அவளது நண்பிக்கும் நடந்த கதி என்ன? 

தொல்புரம் கிழக்கைச் சொந்த இ்டமாகக் கொண்ட குடும்பப் பெண் மகேஸ்வரன் சந்திரமலர் தென்மராட்சியிலிருந்து வந்தவுடன் தனது பிரதேசத்துக்கு சென்று வசிக்க அச்சப்பட்டு தனது மகள்களுடன் கொழும்புத்துறைப்பகுதியில் தற்காலிகமாகக் குடியேறினார். சந்திரமலரின் மகளான கொழும்புத்துறை இ்ந்துக்கல்லுாரியில் கற்று வந்த 19 வயது யாழினியும் அவளது நண்பியும் சுண்டுகுழிப் பகுதிக்குச் செல்லும் போது நண்பகல் ஒரு மணியளவில் கொழும்புத்துறை முகாமுக்கு அருகில் சீருடைத் தரப்பால் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். அவர்களை ரக் ஒன்றினுள் துாக்கிச் சென்றதாக நேரில் பார்த்த சிலர் தெரிவித்திருந்தாலும் தாய்க்கு சாட்சி சொல்வதற்கு எவரும் தயாராக இ்ருக்கவில்லை. பிடிக்கப்பட்ட பெண்கள் கதறக் கதற  கொழும்புத்துறை இ்லந்தைக்குளம் வீதியால் கண்டி வீதிவரை கொண்டு செல்லப்பட்டதை பலரும் பார்த்திருந்தனர்.  அரியாலை கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில் வதை முகாமுக்கு ரக் மூலம் கொண்டு செல்லப்பட்டு பாலியல் வல்லுறவின் பின் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கலாம்.

யாழ்ப்பாண ஆன்மீகத் தலைவர்களால் கைவிடப்பட்ட சில அப்பாவிப் பெண்களுக்கு நடந்த கொடூரங்கள்…

ஏற்கனவே புலனாய்வுத் தொடர் 5 ல் வன்னியிலிருந்து தென்மராட்சியில் பல்வேறு தேவைகளுக்காக தங்கியிருந்த யுவதிகள், குடும்பப் பெண்கள் தொடர்பாகவும் அவர்கள் செய்வதறியாது படையினரின் முற்றுகைக்குள் சிக்கி யாழில் அநாதைகளான நிலையில் பாதுகாப்பற்று தங்கியிருந்தது தொடர்பாகவும் அவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்து இடவசதிகள் மேற்கொள்ளுமாறு ஆன்மீகத்தலைவர்களை கேட்ட போதும் அவர்கள் மறுத்துவிட்டது தொடர்பாகவும் சுட்டிக் காட்டியிருந்தோம்.

 UNIVERSITY TEACHERS FOR HUMAN RIGHTS எனும்   ராஜினி திராணகமவின் கொலைக்குப் முன்னராக ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்புக்கு தகவல் வழங்கிய பட்டதாரி மாணவனுக்கு நடந்த கதி!

UNIVERSITY TEACHERS FOR HUMAN RIGHTS எனும் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட அமைப்பு யாழில் 1996ம் ஆண்டுக்குப் பின்னர் கிருசாந்தி கொலை மற்றும் யாழில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சில தகவல்களுடன் கூடிய புத்தகம் ஒன்றை 1999ம் ஆண்டு ஏப்பரல் மாதம் வெளியிட்டிருந்தது. குறித்த ஆவணப்பதிவுக்காக யாழ் பல்கலைக்கழக 1994ம் ஆண்டு பட்டதாரி மாணவன் சில தகவல்களை மிகவும் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது சித்திரவதை, கற்பழிப்பு ஆதாரங்களுடன் குறித்த புத்தகத்தை தயாரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வழங்கியிருந்தான். குறித்த புத்தகம் வெளியிடப்பட்டு ஓரிரு மாதங்களில் வெள்ளை வானில் வந்தவர்கள் தாவடிப்பகுதியில் அவனைக் கடத்திச் சென்று கடும் சித்திரவதைக்குப் பின் கொன்று கோண்டாவில் சுடலைக்குள் அரைகுறையாக எரித்துவிட்டுச் சென்றிருந்தார்கள். அவன் யாரால் காட்டிக் கொடுக்கப்பட்டான் என்பது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக அப்போது கடமையாற்றி ஒருவருக்கே வெளிச்சம்….

சுதுமலையில் பிடிக்கப்பட்ட குடும்பப் பெண்ணுக்கும் மகளுக்கும் அவர்களுடன் தங்கியிருந்த அப்பாவி வன்னி யுவதிக்கும் நடத்தப்பட்ட கொடூர சித்திரவதை

பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த 44 வயதான குடும்பப் பெண் கனகசிங்கம் சந்திராவும் (பெண்ணின் பெயர் மட்டும் மாற்றியுள்ளோம்)  அவளது மகளான 22 வயதான கனகசிங்கம் ஜெசிந்தாவும் ( பெண்ணின் பெயர் மட்டும் மாற்றியுள்ளோம்) (தற்போது பிரான்சில் வாழ்கின்றார்) சுதுமலைப் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்கள். (சந்திரவின் கணவனும் மற்றும் 2 பிள்ளைகளும் வன்னியில் வசித்துவந்தார்கள்)  அவர்களுடன் வன்னியிலிருந்து வந்து செல்ல இடமின்றி அடைக்கலாமான 21 வயதான யுவதி சகாதேவன் கிருஷ்ணவேணியும் தங்கியிருந்துள்ளாள். 1996ம் ஆண்டு  இறுதிப் பகுதியில் குறித்த வீட்டுக்கு நள்ளிரவு வேளை வந்த வெள்ளை வான் அவர்கள் 3 பேரையும் கடத்திச் சென்றது.

சுதுமலையில் பிடிக்கப்பட்ட அவர்கள் கே.கே.எஸ் வீதி கொக்குவில் பகுதியில் உள்ள கட்டடத்துக்கு கொண்டு வரப்பட்டனர் ( அந்தக் கட்டடமே தற்போது பொக்ஸ் (Fox Resorts) என்ற ஹோட்டல். படையினரின் முகாம் காணப்படுவதற்கு முன் அது 1995ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் முகாமாக காணப்பட்து)

குறித்த படையினரின் முகாமுக்கு கொண்டு வரப்பட்ட அவர்கள் தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளில் நிர்வாணமாக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் சந்திராவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் அவளது மகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.  வாக்குமூலங்களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சந்திராவும் மகளும் ஒன்றாக கொண்டு வரப்பட்டு ஒரே நேரத்தில் பலரால் மாறி மாறி வ்லலுறவுக்குள்ளானார்கள்.

சந்திரா இரு கைகளும் சேர்த்துக் கட்டப்பட்டு அறையின் மேற்புற தீராந்தியில் துாக்கிக் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டாள். அவளது பிறப்புறுப்புக்குள் எஸ்லோன் குழாய் சொருகப்பட்டது. அந்தக் குழாய்க்குள் முள்ளுக் கம்பி சொருகி பிறப்புறுப்பின் உட்பகுதிவரை சென்ற பின் எஸ்லோன் குழாய் எடுக்கப்பட்ட பின் முள்ளுக்கம்பி மூலமாக சந்திரா கட்டி இழுக்கப்பட்டு அவளது மகள் ஜெசிந்தா முன்னாலேயே சித்திரவதைகள் நடந்து கொண்டிருந்தது.

தற்போதும் 53 வயதான நிலையில் திருமணம் ஆகாது பிரான்சில் வாழும் ஜெசிந்தா  குறித்த சம்பவத்தை எமது ஊடகச் செயற்பாட்டாளர்களிடம் அழுதழுது கூறியிருந்தார். தனது அப்பா மற்றும் 2 சகோதரர்களும் வன்னியில் என்ன செய்கின்றார்கள் என்றும் தங்களுடன் தங்கியிருந்த கிருஷ்ணவேணி புலி உறுப்பினரா? என்றுமே கேள்விகள் தங்களிடம் கேட்டார்கள் என ஜெசிந்தா கூறினார். சித்திரவதை தாங்காது தாயார் மயக்கமடைந்த பின் தன்னையும் அவ்வாறே கட்டித் துாக்கி பெண் உறுப்புக்குள் முள்ளுக்கம்பி சொருகி கேள்விகள் கேட்கத் தொடங்கினார்கள். தானும் வேதனை தாங்காது மயங்கமடைந்தேன் எனக் கூறினாார்.

அடுத்தநாள் அதிகாலை  வயல்பகுதி ஒன்றிற்கு அருகில் காணப்பட்ட முகாமுக்கு ரக் மூலம்  தாயும் மகளும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கிருஷ்ணவேணியும் பல இளைஞர்களும் நிர்வாண நிலையில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த முகாமில் வாகனம் ஒன்றில் கழற்றப்பட்டிருந்த டைனமோவை வளையம் ஒன்றில் இணைத்து கைகளால் சுற்றும் பேர்து வரும் மின்சாரத்தால் அவர்களின் பிறப்புறுப்பில் வயர்களைச் சொருகி சித்திரவதை செய்து கொண்டிருந்துள்ளார்கள் படை அதிகாரிகள். கிருஷ்ணவேணியின் பிறப்புறுப்பிலும் முள்ளுக் கம்பி சொருகப்பட்டு அதில் வயர்கள் சொருகப்பட்டிருந்துள்ளதை தாய் சந்திராவும் மகளும் அவதானித்தார்கள். அதே நேரம் கிருஷ்ணவேணியிடம அடிக்கடி வரும் அவளது நண்பனும் அவனது சிநேகிதனும் மற்றுமொரு யுவதியும் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் மயங்கமடைந்து காணப்பட்டதையும் கண்டிருந்தார்கள். தாய், மகள் ஆகியோரின் பிற்பபுறுப்பில் சொருகப்பட்டிருந்த முள்ளுக்கம்பிகள் அகற்றப்படாதே குறித்த முகாமுக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டிருந்தார்கள்.

சகாதேவன் கிருஷ்ணவேணி

அங்கு வைத்து படை அதிகாரி ஒருவர் தாயையும் மகளையும் பிரித்து வைத்து சிங்களம் தெரிந்த தமிழன் ஒருவனின் துணையுடன் இருவரையும் மீண்டும் பல கேள்விகள் கேட்டதுடன் முரன்பாடாக இருவரும் அங்கும் பதிலளித்ததால் அவர்களுக்கும் பிறப்புறுப்பி்ல் சொருகப்பட்ட முள்ளுக்கம்பியில் வயர்களை இணைத்து டைனமோ மூலம் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. இவ்வாறான சித்திரவதை காரணமாக மயக்கமடைந்து காணப்பட்ட மற்றைய பெண்ணும் கிருஷ்ணவேணியும்  இரு நாட்களிலேயே கடும் சித்திரவதை காரணமாகப் பலியாகியுள்ளார்கள். பலியாககி் கிடந்த இரு பெண்களையும் துாக்கிச் சென்று வாகனம் மூலம் சற்று துாரத்தில் வீதியில் போட்டு துாப்பாக்கியால் சுட்டுவிட்டு முகாமுக்கு திரும்பிய குறித்த படை அதிகாரிகள் சந்திராவுக்கும் மகளுக்கும் இதே நிலைதான் என கூறியுள்ளார்கள்.

May be an image of ‎newspaper, temple and ‎text that says "‎மிகாககுவில் பகு.தியில் வைத்து கடந்த வியாழக் இிழமை சுடப்பட்டு உபிரி மந்த இனந்தெரியா இரு இளம் பெண்களி. கூடலங் கள் வெள்ளி மாலை 5-15 مه மணி ணி அளவிക் யாழ் บก மம் ஆஸ் பத்திரியில் ஒப்படைக்கப்பட் 2 பெண்களி களின் சடலங்கள் கள் அஸ்பத்திரியில் ஒப்படைப்பு மடைகள் தாறும்ாறாகர் கிழிக்கப்பட்ட கிழி நிலையதிலயே சடலங்கள் இரண்டும் காணப் பட்டன என்று உதரிய வந் தது. சடலங்கள், பிரேத पੀ சோதனைக்ாகவும். மரண விசாரணைக்காகவும் க்காகவும் விசாரணை ஸ பத்திரி பிரேத வைக் எப்பட்டன‎"‎‎

ஏற்கனவே கொலை செய்து விட்டு யுவதிகளின் அடையாள அட்டை உறைக்குள் தமிழீழ எழுச்சிப் பாடல் ஒன்று எழுதப்பட்டிருந்த கடதாசி இருந்ததாம் அதனாலேயே சுட்டுக் கொன்றார்களாம் என கூறுகின்றார் யாழ் மாவட்ட 51வது படைத்தளபதி

May be an image of text

கிருஷ்ணவேணியும் மற்றைய யுவதியும் கொல்லப்பட்ட பின்னர் அங்கு தடுத்து வைக்க்பபட்டிருந்த பல ஆண்களும் கடும் சித்திரதைக்குப் பின்னர் மயக்கமடைந்து காணப்பட்டனர். அவர்கள் பின்னர் மயங்கிய நிலையிலேயே  இழுத்துச் செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 4 நாட்கள் பெண் உறுப்பில் முள்ளுக்கம்பிகளுடன் தாயும் மகளும் தடுத்து வைக்கப்பட்டு பல தடவைகள் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சாப்பாடு கொடுத்தது என படையினரின் சித்திரவதை காரணமாக வாக்குமூலம் கொடுத்திருந்தார்கள். வாக்குமூலம் கொடுத்து  3 நாட்களின் பின்னர் சந்திராவையும் மகளையும்  பலாலி இராணுவ வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற படை அதிகாரிகள் அங்கு வைத்து பெண் உறுப்பில் சொருகப்பட்டிருந்த முள்ளுக்கம்பிகளை அங்கிருந்த வைத்தியர் மூலம் கழற்றச் செய்து சிகிச்சை பெற வைத்துள்ளார்கள். அங்கும் படை அதிகாரி ஒருவரால் பல தடவைகள் தான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக ஜெசிந்தா தெரிவித்திருந்தார். அதன் பின்னர் 6 மாதம் தங்களை தடுத்து வைத்திருந்து தன்னை பல முறை வல்லுறவுக்குள்ளாக்கிய பின் ( படை அதிகாரிகளால்)  விடுவித்தார்கள் என ஜெசிந்தா கூறினார். தனது தாய்க்கு சித்திரவதை காரணமாக ஏற்பட்ட உடல் கண்டல்காயங்கள் மற்றும் மனப்பிறழ்வு காரணமாக அவர் நோயாளியாக மாறி 2002 ஆண்டு மரணமானதாக ஜெசிந்தா தெரிவித்தார்.

2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின்னரே வெளிநாடு சென்ற தனது அண்ணன் தன்னை பிரான்சிற்கு அழைத்ததாக கூறினார் ஜெசிந்தா. ஜெசிந்தா விடுதலையான சில நாட்களில் ஜெசிந்தாவைச் சந்தித்து படையினரின் சித்திரவதைகள் தொடர்பாக கேட்டு அறிந்து அதனை  UNIVERSITY TEACHERS FOR HUMAN RIGHTS என்னும் அணியினருக்கு தெரியப்படுத்திய பட்டதாரி இளைஞனே கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெசிந்த தெரிவித்த கருத்துக்களை குறித்த புத்தகத்தில் பதிவிட்டால் ஜெசிந்தாவுக்கு சிக்கல் வரும் என்பதால் குறித்த முகாமில்  ஏனையவர்களுக்கு நடந்த சித்திரவதைகள் தொடர்பாக அந்த புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கேணல் உதயபெரோ என்பவனது கட்டளையின் கீழ் கொக்குவில் பொக்ஸ் ஹோட்டல் முகாமில் நடந்த கொடூர சித்திரவதைகள் தொடர்பாக UNIVERSITY TEACHERS FOR HUMAN RIGHTS  வெளியிட்ட சில தகவல்களைத் தந்துள்ளோம்.

May be an image of text

May be an image of text

May be an image of text

மற்றுமொரு சித்திரவதை சம்பவம் 

May be an image of text

கொக்குவிலில்  முன்னைய காலத்தில்  படையினரின் சித்திரவதை முகாமாகத் தொழிற்பட்ட Fox Resorts ஹோட்டல்

தொடரும்