அறிவு என அழைக்கப்படும் ஜேர்மனிக் காவாலி தலைமையில் யாழில் உள்ள வெளிநாட்டு ஆசை கொண்டவர்கள் ஏமாற்றப்படுவது எப்படி? வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
ஃபேஸ்புக் விளம்பரம் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக (குறிப்பிட்ட நாட்டை இறங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்) என கூறி பல பேர்களை ஏமாற்றி வருகிறார்கள்.
நம்ப தகுந்த முறையில் உரையாடலை மேற்கொண்டு… இந்தியா சென்று அங்கிருந்து குறித்து நாட்டிற்கு ஏற்றுவதாக கூறி….. ஏற்கனவே தங்களால் சென்ற நபர்கள் என அவர்களது குழு நபர்களே கதைத்து நம்ப தகுந்த முறையில் உரையாடலை மேற்கொண்டு அவர்கள் வலையில் சிக்க வைத்து.. குறித்து நாட்டை சென்று அடையும் வரை அனைத்து செலவுகளும் தங்களுடையது என்று நம்ப வைப்பார்கள்.
கொழும்பில் இவர்களுக்காக வேலை செய்யும் ஒரு தனியார் நிறுவனம் இலவசமாக இந்தியன் விசா இனை ஒரே நாளில் பெற்று தருவார்கள். பின் அவர்களை செலவிலேயே இந்தியா செல்ல டிக்கெட்டுகள் போட்டு தரப்படும். இவர்கள் நோக்கமே இந்தியா, உஸ்பெகிஸ்தான் போன்ற இலகுவாக செல்ல கூடிய நாடுகளுக்கு ஆட்களுக்கு கடத்தி அங்கே அவர்களை ஏமாற்றி show money எனும் பெயரில் உங்களிடம் ஒரு தொகை டொலர்களை கொடுத்து விட்டு… பின்னர் அந்த பணத்தையும் இலங்கையில் ஒரு கணக்கிற்கு மாற்றம் செய்யும் படி கூறி….. அபொழுத்து கூட தங்களை நம்ப வைக்க தாங்கள் இதற்கு முதல் ஏற்றிய நபர்களின் கருத்து video ஒன்றை பொய்யாக உருவாக்கி அதை அனுப்பி நப்ப வைத்து முழு பணத்தையும் பெற்று விட்டு…. நீங்கள் நிற்கும் நாட்டில் தனித்து விட படுவீர்கள்/ அல்லது transit என்ற பெயரில் இலங்கை கு அனுப்ப படுவீர்கள். அதன் பின் அந்த குழு உங்களை block செய்து விடுவார்கள்.
அறிவு எனும் பெயரில் ஜேர்மன் நாட்டில் உள்ள அரகன் இதன் தலைமை
ராஜ்/ இந்தியாவில் இவனுகாக வேலை செய்பவன்
இவர்கள் தொடர்புடைய புகைப்படங்கள் கீழே உள்ளது. இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால்/ இவர்களால் ஏமாற்ற பட்ட வர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம்.
தற்போதும் புது புது பெயர்களில் இந்த கும்பலின் செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. மக்களே மிக அவதானம். நீங்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை எல்லாம் இலகுவாக ஆசை வார்த்தை காட்டி நம்பி ஏமாற்றி விடுவார்கள்.














