புதினங்களின் சங்கமம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநரான நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநரான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னர் கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக நிலந்த ஜெயவர்தன குற்றவாளி என்று ஒழுக்காற்று விசாரணையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்தது. #lka