Home புதினங்களின் சங்கமம் யாழில் அதிரடிப்படையினர் துரத்த துரத்த கஞ்சாவை எறிந்துவிட்டு ஓடியவர்கள் யார்?

யாழில் அதிரடிப்படையினர் துரத்த துரத்த கஞ்சாவை எறிந்துவிட்டு ஓடியவர்கள் யார்?

நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் ரக வாகனத்தில் கஞ்சா போதைப் பொருளைக் கடத்திச் சென்றவர்களை சிறப்பு அதிரடிப் படையினர் துரத்திச் சென்ற போதும் அவர்கள் கஞ்சாவை போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 65 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டது.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடி – துன்னாலை வீதியில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.