புதினங்களின் சங்கமம்

யாழில் அதி வேகம்!! தலைகீழாகப் புரண்டு கிடக்கும் கனரக வாகனம்!! வீடியோ

பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று காலை தடம்புரண்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்‌ தெரியவருவதாவது,
கற்கோவளம் பகுதியிலிருந்து வீதி புனரமைப்புப் பணிக்கு பயன்படுதப்பட்ட ரோளர் வாகனத்தைத் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனமே புறாப்பொறுக்கி பகுதியில் தடம்புரண்டுள்ளது. முன்னால் துவிச்சக்கர வண்டியொன்றில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து குறித்த கனரக வாகனத்துடன் விபத்து ஏற்படவிருந்த நிலையில், அவரைக் காப்பாற்ற முற்பட்ட வேளையிலே குறித்த வாகனம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No photo description available.May be an image of 1 personMay be an image of 1 person and treeNo photo description available.