புதினங்களின் சங்கமம்

யாழில் கடை ஒன்றின் முன் நின்ற மோட்டார் சைக்கிள் மீது காவாலிகள் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் நகர் பகுதியில் கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் கொண்ட குழு மேற்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. மானிப்பாய் பொலிஸ் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.