கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சந்தமாலி மீது தாக்குதல்!!
கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சந்தமாலி உலுவிடகே, கொழும்பு மாநகர சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் தனது அலுவலகத்திற்கு சென்றிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
