புதினங்களின் சங்கமம்

யாழ் வேம்படி வீதியில் பட்டப்பகலில் சினிமாப்பாணியில் வாள் வெட்டு!!

யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கார் சாரதியாக இருக்கும் ரஜீவ்குமார், யாழ்ப்பாணம் கோவில் வீதியைச் சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே படுகாயமடைந்தார்.

யாழ்ப்பாண நகரில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வேம்படி வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போத ரஜீவ்குமார் செலுத்திய காரை, கறுப்பு நிற கார் ஒன்றில் வந்தவர்கள் இடை மறுத்துள்ளன.

அதே நேரத்தில் 5 மோட்டார் சைக்கிள்களில் வாள்கலுடன் வந்த மர்ம குழு கார் சாரதியை வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

படுகாயமடைந்த சாரதியை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.