புதினங்களின் சங்கமம்

யாழில் பிறந்தநாள் கொண்டாட முற்பட்ட இளைஞனுக்கு வாள் வெட்டு!! கையை இழந்தார்!!

தனது பிறந்­த ­நா­ளுக்­காக பொருள்­கள் வாங்­கக் கடைக்­குச் சென்­ற­போது வாள்வெட்டில்
கைதுண்டான நிலையில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிகபட்டுள்ளார்.

குறித்த சம்­ப­வம் மந்­து­வில் மேற்­கில் இடம் பெற்­றது.

சம்பவத்தில் மந்­து­வில் மேற்கு கொடி­கா­மத்­தைச் சேர்ந்த 25 வய­து­டை­ய­வரே இந்த
நிலைக்கு ஆளாகியுள்ளார்.

குறித்த இளைஞன் கடைக்கு சென்றபோது அவரை வழி­ம­றித்த இனந்­தெ­ரி­யாத நப­ர் ஒருவர்
அவர்மீது வாள் வெட்­டுதாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இளைஞனின் கை துண்டாடப்பட்ட நிலை­யில் சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­
வ­ம­னை­யில் அனுமதிகபட்டு பின்னர் , மேலதிக சிகிற்சைக்காக யாழ்போதனா
மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என
தெரி­விக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.