புதினங்களின் சங்கமம்

தன்னை விட வயது குறைந்தவனுடன் மனைவி கள்ளத் தொடர்பில் இருந்த வீடியோ பார்த்த கணவன்!! வவுனியா ஆசிரியை சுவர்ணலதா கழுத்தறுத்து கொல்லப்பட்ட பின்னணி!! வீடியோ

வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

நயினாதீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.

இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன், மனைவியை கொலைசெய்து, நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்துள்ளார். ஆசிரியைக்கு வயது குறைந்த இளைஞன் ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கணவன் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த விவகாரம் இருவருக்குள்ளும் தீர்க்கப்பட்டு, அண்மைய நாட்களில் சுமுகமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆசிரியையுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்ட இளைஞன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பியுள்ளனர்.அத்துடன் ஆசிரியை கர்ப்பமாக இருப்பதற்கு தான் தான் காரணம் எனவும் குறித்த இளைஞன் கூறியதுடன் ஆசிரியையின் அந்தரங்கச் செயற்பாடுகளை எப்படியானது  என்பதையும் அந்தரங்கப்பகுதி உட்பட்ட இடங்களில் உள்ள மச்சங்கள் போன்றவற்றையும் துல்லியமாக தெரிவித்து தன்னுடன் உறவு கொண்டதையும் கணவனுக்கு வீடியோவாக அனுப்பியுள்ளான்.   இதை பார்த்து கொந்தளித்த கணவன், ஆசிரியையின் சகோதரனிடமும் இதை கூறியுள்ளார்.

பின்னர், இன்று- இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி, பிளாஸ்டிக் பையில் வைத்து, மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து, புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

May be an image of 1 personNo photo description available.

May be an image of 2 people, people smiling and temple

May be an image of 2 people, hospital and textMay be an image of 2 people, beard and people smiling

May be an image of 1 person, smiling and text that says "N.K"May be an image of 1 person and smilingMay be an image of campsite and tree