புதினங்களின் சங்கமம்

யாழில் 7 வயது மாணவனுக்கு ஆசிரியை செய்த கொடூரம்!!

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தரம் 3 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தண்டிப்பதற்காக அவனது சப்பாத்து மற்றும் காலுறை ஆகியவற்றை கழற்றிய பின் அவனை கடி எறுப்புக்குள் முட்டுக்காலில் நிறுத்தியுள்ளார் ஆசிரியை. இச் சம்பவம் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கிடையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. பாடசாலை அதிபர் சம்பவத்தை மூடி மறைக்க முற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.