புதினங்களின் சங்கமம்

கொழும்பு ராஜகிரிய பகுதியில் தீ விபத்து ! வீடியோ

கொழும்பு – இராஜகிரிய பகுதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் 01.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


May be an image of fireMay be an image of 2 people and fire