புதினங்களின் சங்கமம்

குருந்தூர்மலைப் பகுதியில் கைது செய்யப்பட்ட விவசாயிகளின் விளக்கமறியல் நீடிப்பு..!

முல்லைத்தீவு – குருந்தூர்மலைப் பகுதியில், கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.மே 10 ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக் கொண்டிருந்த போது குறித்த இரு விவசாயிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் முதலில் மே 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று (15.05.2025) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது, குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சந்தபொதி தேரர் தொல்பொருள் திணைக்களத்திடம் அளித்த புகாரை தொடர்ந்து இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.