சிஐடி க்கு எதிராக பிள்ளையான் நடாத்திய பாய்ச்சல்!! அடிப்படை உரிமை மீறல் வழக்கு
கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல்போன வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஏப்ரல் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) பிள்ளையான் கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 12 ஆம் தேதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

