புதினங்களின் சங்கமம்

யாழில் குழந்தைகளை வெயிலில் கருவாடாக்கிக் கொடூரம்!! பலர் மயங்கி வீழ்ந்தனர்!! பார்த்து ரசித்த பிரதம விருந்தினர்கள்!! அதிர்ச்சிக் காட்சிகள்

யாழ் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் சற்று முன் பிஞ்சுக் குழந்தைகள் பலர் மயங்கி வீழ்ந்த வண்ணம் உள்ளார்கள். யாழ் கல்வி வலயத்தால் நடாத்தப்படும் செயற்பட்டு மகிழ்வோம் என்ற வலய மட்ட நிகழ்வு இன்று கொளுத்தும் வெயிலில் நண்பகல் ஒரு மணியளவில் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரி மைதானததில் ஆரம்பமாகியது. இந் நிகழ்வுக்காக 10 வயதுக்குட்பட்ட பாலகர்கள் பிரதம விருந்தினர்களின் வருகைக்காக நடு மைதானத்தில் நிறுத்தபட்டனர். நண்பகல் வெயியில் நிறுத்தபட்ட குறித்த பாலகர்கள் ஒருவர் பின் ஒருவராக பலர் மயங்கி விழுந்த வண்ணம் இருந்தார்கள்.. இருப்பினும் குறித்த விழா ஏற்பாட்டாளர்களான பன்னாடைகள் அதைப் பற்றிப் பொருட்படுத்தாது நன்கொடைகளை அள்ளி வழங்குபவர் என்ற போர்வையில் வரி விலக்குப் பெறும் ஈ.எஸ்.பி. நாகரத்திணம் மற்றும் யாழ் பல்கலைகழக ஒட்டுண்ணியியல் துறை பேராசிரியர் ஆகிய பிரதம விருந்தினர்களைக் குசிப்படுத்துவதிலேயே குறியாக இருந்ததாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

மைதானத்தில் இருந்த பயிற்றுவிப்பார்கள்கள் மற்றும் ஆசிரியர்கள் தாம் மட்டும் வெயிலில் இருந்து தப்புவதற்காக தலைகளில் தொப்பிகள் அணி்ந்தும் குடைகளைப் பிடித்தும் இருந்ததுடன் பிரதம விருந்தினர்கள் குளிர்பாணம் அருந்தி அருகில் இருந்த பெண்களுடன் சல்லாபித்துக் கொண்டு நிழல் பந்தல்களில் இருந்தமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

யாழ் கல்வி வலய முட்டாள் அதிகாரிகள் தமது பிள்ளைகளை இப்படி நடு வெயிலில் நிறுத்தி பிரதம விருந்தினர்களை மனம் குளிர்விக்க இப்படி வேடிக்கை பார்க்க விடுவார்களா?

ஐயோ சேர்… உங்களைப் பார்க்க கறுப்பு எம்.ஜி.ஆர் மாதிரியே இருக்கிறீங்க…. 

ரீச்சர்… நீங்களும் சிம்ரன் மாதிரியே இருக்கிறீங்கள… கதைச்சுக் கொண்டிருக்காம  யூசை குடியுங்க முதலில

May be an image of 5 peopleMay be an image of 5 peopleMay be an image of 3 peopleMay be an image of 4 peopleMay be an image of 2 people