யாழில் யுவதியை கொடூரமாகத் தாக்கிய பாதிரிகளும் கன்னியாஸ்திரிகளும்!! வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்
செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் ஆலய பொதுக்கூட்டத்தில் அடிதடி-யுவதி ஒருவர் காயம்
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் ஆலய பொதுக் கூட்டத்தில் அடிதடி இடம்பெற்றுள்ளது.
பாதர்,சிஸ்டர் முன்னிலையில் நீதி கோரிய யுவதி மீது மோசமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பங்குத்தந்தை ஆதர் ஜஸ்ரின் தலைமையில் இன்று பிற்பகல் 09.00 மணியளவில் ஆலய வளாகத்தில் ஆரம்பமான பொதுக் கூட்டத்தின் போது பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்பிலிப்நேரியார் ஆலயத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத நிலையில் காணப்பட்டுவந்த கைகலப்பு தொடர்பான விடையம் இன்று பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையிலையே பெண் ஒருவர் மீது பங்குத்தந்தை முன்னிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தை எதிர்கொண்ட யுவதியின் உடலில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் யுவதி அணிந்திருந்த தங்க நகைகளும் அறுக்கப்பட்டுள்ளது.
பங்குத்தந்தையும், கன்னியாஸ்திரிகளும் யுவதி மீது மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதலை தட்டிக் கேட்காமல் பொலிசாரோ அல்லது ஊடகங்களிடமோ இதுபற்றி கூற வேண்டாம் என்றும் கூறினால் தெய்வ சாபம் ஏற்படும் எனவும் தெரிவித்து சமாதானப்படுத்தியுள்ளனர்
தாக்குதலுக்குள்ளான குறித்த யுவதிக்கு ஆலய பங்குத்தந்தை மற்றும் நிர்வாகத்தால் ஒரு தலை பட்சமாக முடிவெடுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டது
நீதிவேண்டி யாழ்மறைமாவட்ட குருமுதல்வரிடம் சென்ற யுவதிக்கு நீதிபெற்றுத்தருவதாக குருமுதல்வர் அறிவித்து பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில்
இன்று இடம்பெற்ற கூட்டத்தில் யுவதிக்கு இரண்டாவது முறையாக தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதனை மூடி மறைக்குமாறு பங்குத்தந்தை,மற்றும் நிர்வாகம் கடும் முயற்சியில் ஈடுபடுவதால் யாழ் ஆயரின் கவனத்திற்கு இதை கொண்டுவருகிறோம்

