யாழ்ப்ப்பாணத்தில் வெளிநாடு செல்ல பைத்தியங்களாகத் திரிந்தவர்களிடம் பெரும் கொள்ளையடித்த ஆகிசா!!
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு மோகத்தில் திரிந்தவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கிருஸ்ணராதா அல்லது ஆகிசா என அழைக்கப்படுவள் தற்போது யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாள். வெளிநாட்டு மோகத்தில் திரிந்தவகளை ஏமாற்றுவதற்காக யாழ் நாவலர் வீதியில் அலுவலகம் ஒன்றை அமைத்து கனடா வேலை விசா, சுற்றுலா விசா என்பன பெற்றுத்தருவதாகக் கூறி அங்கு வந்த ஒவ்வொருவரிடமும் 50 லட்சங்களுக்கும் குறையாத பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளாள். இவள் தனக்கு நவீனரக கார் மற்றும் அதற்கு சாரதி என தனது தோற்றத்தில் சினிமாப் பாணியிலான பணக்காரத் தோற்றத்தை உண்டு பண்ணியே வந்தவர்களை ஏமாற்றியதாகத் தொியவருகின்றது.
இவளுக்கு BR/01/PC/2024 , BR/1654/PC/2024 , BR/1999/PC/2024, BR/2001/pc/2024 என்பன உள்ளடங்களான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் வெளிநாட்டு மோகத்தில் திரிந்தவர்களை ஏமாற்றிய வழக்குகள் ஆகும். நாவலர் வீதியில் அலுவலகம் அமைத்து பலரிடம் பணம் பெற்ற இவள் அதன் பின்னர் யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் அழகுகலை நிலையம் ஒன்றை நிறுவி அங்கு இருந்துள்ளாள். இவள் தொடர்பாக யாழ்ப்பாண பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு பலரும் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் இவள் கைது செய்யப்பட்டுள்ளாள். நீதிமன்றில் இவளை ஆயர்ப்படுத்திய போது தனக்கு முள்ளந்தண்டில் பிரச்சனை இருப்பதாகக் கூறி பிணை எடுத்து வெளியே வந்துள்ளாள். அதன் பின்னரும் இவளது திருவிளையாடல்கள் தொடர்ந்துள்ளன. மேலும் பலரையும் பணம் பெற்று ஏமாற்றியதால் இவளைப் பிடித்து சட்டவிரோதமாக வெளிநாடு அனுப்பும் குற்றத்தின் கீழ் குடியகழ்வு குடியல்வு 45C பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்திய பொலிசார் பிணையில் வெளியே வர முடியாதவாறான வழக்கில் சிறையில் அடைத்து்ளளார்கள்.
இதனால் கடும் கோபமுற்ற கிருஷ்ணராதா தற்போது தன்னைச் சிறைக்குள் தள்ளக் காரணமாக நேர்மையான பொலிஸ் அதிகாரி மீது பொய்யான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றார். இவளைப் போல் மோசடிகள் செய்யும் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

