புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இது பிட்டுப் பட காட்சியா?  அதுதான் இல்லை… நம்ம pre wedding photo shoot திருவிளையாடல்கள்!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
இப்ப நீங்க பார்க்கிறது ஏதோ ஒரு பிட்டு படத்தோட காட்சி அப்படின்னு நினைச்சீங்கன்னா அது தப்பு.
இதுக்கு பேர் தான் pre wedding photo shoot.
அது என்ன pre wedding photo shoot?
கல்யாணத்துக்கு முன்னாடி கணவன் மனைவி ஆக போறவங்க ஒன்னா சேர்ந்து மாலையும் கழுத்துமா போட்டோ எடுத்துக்கிட்டது பழைய pre wedding photo shoot.
இப்போ trending வேற. வெறும் டவலை மட்டும் கட்டிக்கிட்டு நடு காட்டுல டவலை அவுத்து காட்டுற மாதிரி போட்டோ எடுக்கிறது, கல்யாணத்துக்கு அப்புறம் கட்டில்ல என்னவெல்லாம் பண்ணுவார்களோ அதை கல்யாணத்துக்கு முன்னாடி ரிகர்சல் பண்ற மாதிரி போட்டோ எடுத்து அதை பெருமையா ரீல்ஸ் வேற போடுறது, இதோ இப்ப பாக்குறீங்களே தண்ணிக்குள்ள வச்சு ஜலபுலஜங்க் போஸ் கொடுக்குறதுனு செம்ம trending ஆக போய்கிட்டு இருக்கு.
எனக்கு ஒன்னு மட்டும் புரியல…!
முன்னாடி எல்லாம் ஒரு கல்யாண ஆல்பம் இருந்துச்சுன்னா வீட்டுக்கு யாராவது சொந்தக்காரங்க வந்தாங்கன்னா அவங்கள உட்கார வைத்து அந்த ஆல்பத்தை காமிச்சு அதோட மெமரீசை நம்ம பகிர்ந்து கொள்வோம்.
ஆனா இப்போ எடுக்குற இந்த ஆல்பத்தை என்ன செய்வாங்க?
இந்த ஆல்பத்தை இதுகள பெத்ததுங்க பார்த்தாலே இல்ல இதுங்க பெத்தது பார்த்தாலே அவங்க மனநிலை எப்படி இருக்கும்?
இல்ல வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்தா சுத்தி உக்கார வச்சு இந்த ஆல்பத்தை காமிச்சு இதோட மெமரிசை பகிர்ந்துக்க முடியுமா?
அப்புறம் எதுக்கு இந்த மாதிரியான போட்டோ ஷூட்?
நடு ரோட்டில் அம்மணமா மட்டும்தான் இன்னும் போட்டோ ஷூட் பண்ணல. வருங்காலத்தில அது நடக்கவும் வாய்ப்பிருக்கு…!
Pre wedding photo shoot பண்றதை தப்பு சொல்லல தாராளமா பண்ணுங்க.எல்லாரும் சேர்ந்து உக்காந்து பார்க்குற மாதிரி ஆல்பம் பண்ணுங்க தப்பில்ல.அதை விட்டுட்டு பிட்டு பட அளவுக்கு தரம் தாழ்ந்து ஆல்பம் வேணாமே.
அப்படிதான் டா ஆல்பம் போடுவோம் உன்னால என்ன பண்ண முடியும்னு கேட்டிங்கனா என்னால என்னங்க பண்ண முடியும்.பொது இடத்தில பார்க்க முடியாது தனியா உட்கார்ந்து பார்த்து ரசிச்சுட்டு அடுத்த வேலைய பார்க்க வேண்டியதுதான்.
அவுத்து போட்டு ஆல்பம் போடுற அவங்களுக்கே வெட்கம் இல்லாதப்போ அதை பார்க்குற நமக்கு எதுக்கு வெட்கம்?
Shared ..
நன்றி🙋