புதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலைக்குள்ளும் போதைப் பொருள் வியாபாரம்..

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நூதனமான முறையில் பொலிசாரின் கண்ணில் மண்ணைத் தூவி இடம்பெற்ற போதைப் பொருள் வியாபாரம் நேற்று மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் பிடிபட்டது.

வெளியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பு அச்சம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிடும் நேரங்களில் நோயாளிகளை பார்வையிடுவது போன்று உள் நுழையும் கும்பல் இந்த வியாபாரத்தை பாதுகாப்பாக மேற்கொண்டு வருகிறது.

குறித்த தகவல் தெல்லிப்பழை பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவரை வைத்து விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..