ரஜீவன் டோலர்… எப்புடி அதிபர் பரீட்சையில் பாஸ் பண்ணியிருப்பீர்கள்? தப்புத் தப்பா கணக்கு போடுறீங்க!!
தரவு – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த தொகை – 225 பேர். அதில் சிறிதரனைத் தவிர ஏனையவர்களுடன் ரஜிவன் எம்.பி கதைக்கின்றார்.
நிறுவ வேண்டியது – ரஜீவன் எம்.பி கதைப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
நிறுவல் – சிறீதரனுடன் கதைப்பதில்லை. ஆகவே 224 பேர். அத்துடன் ரஜீவன் எம்.பி தன்னையும் அதில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே 223 பேர் ரஜீவன் எம்.பியுடன் தொடர்ச்சியாக கதைக்கின்றார்கள்.
இது பாடசாலை பருவத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்கள் மிகச் சுலபமாக சரி எடுக்கும் கேள்வி……
ஆனால் ரஜீவன் எம்.பி அவர்களே…. ஒரு பாடசாலையின் அதிபராக இருந்த நீங்கள் கணக்கை தப்புத் தப்பாக கூறப்படாது….
குறிப்பு – ஏற்கனவே பிரதமரின் செயலாளர் என நீங்கள் போட்ட புகைப்படத்துடன் கூடிய பதிவின் விளக்கத்தை நாம் பிரசுரித்திருந்தோம். உடனே நீங்கள் அந்தப் பதிவை அழித்துவிட்டீர்கள். அதே போல் நீங்கள போட்ட இந்தப் பதிவையும் மாற்றாமல் அப்படியே வைத்திருக்கவும். பிளீஸ்…
சிறிதரன் எம்.பி பச்சைக் கள்ளன் என்று கிளிநொச்சியில் வாழுகின்ற அப்பாவி மக்களைத் தவிர ஏனைய எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அதே கள்ளனிடமிருந்துதான் நீங்கள், உங்களது தந்தை ஆகியோர் ஜே.பி பட்டம் வாங்கியுள்ளீர்கள். ஆகவே நீங்கள் செய் நன்றி மறப்பது தவறு என நாம் கூற மாட்டோம். ஏனெனில் சிறிதரனும் சுரேஸ்பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் சேர்ந்துதான் பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர் என்பதும் அதன் பின்னர் சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு எதிராக தொழில்பட்டவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். அரசியலில் இது எல்லாம் சாதாரணம் என கவுண்டமணி பாணியில் சொல்வது உண்மைதான்….


