யாழில் இரண்டரை வயதுக் குழந்தையின் அசாத்தியத் திறமை!! கின்னஸ் சாதனை படைக்குமா? வீடியோ
ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளர்.
சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.
சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார்.

