புதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலையில் வழங்கப்பட்ட தடுப்பூசியால் உயிரிழந்த சிசு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

3 மாத குழந்தைக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற தடுப்பூசி மருந்து போடப்பட்ட நிலையில் சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலாசாலை வீதியைச் சேர்ந்த 3 மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து குழந்தைக்கு இத்தடுப்பூசி செலுத்திய பின்னர், வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிசு உயிரிழந்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி குழந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதோடு, சிசுவின் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.