யாழில் ஒழுங்காக வேட்புமணு பத்திரத்தை NPP வேட்பாளர்கள் நிரப்பினார்களா? கடும் சந்தேகம்!! வீடியோ
யாழ் தேர்தல் திணைக்களத்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பல கட்சிகளால், சுயேட்சைக் குழுக்களால் நிரப்பப்ட்ட வேட்புமணுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. NPP கட்சி, கடும் ஊழல் புரிந்த உயர் அதிகாரியான பதில் அரச அதிபர் பிரதீபனை தொடர்ச்சியாக பதவியில் அமர்த்தி வைத்திருப்பது ஏன் என சந்தேகம் எழுந்த நிலையில் NPP கட்சி, ஈ.பி.டி.பி கட்சி, சுமந்திரனின் கட்சி ஆகியவற்றின் வேட்புமணுக்களைத் தவிர ஏனைய கட்சிகளின் பல உள்ளூராட்சி மன்றங்களின் வேட்புமணுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அதே நேரம் முன்னாள் அரச அதிபர் சிவபாதசுந்தரமும் கட்சிகளின் வேட்புமணு நிராகரப்பு மற்றும் செல்லுபடி அறிவுப்புக்களில் அரச உயரதிகாரிகளின் செல்வாக்கு இருப்பதாக கோடிட்டு காட்டியிருந்தார்.
இவ்வாறான நிலையில் NPP கட்சி ஒழுங்காக வேட்புமணுபத்திரங்களை நிரப்பி கொடுத்திருக்குமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏனெனில் குறித்த கட்சியின் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளர் திருக்குறளை பிழையாக கூறுவதுடன் குறித்த கட்சியின் யாழ் பாராளுமன்ற உறுப்பனர் இளங்குமரன் புள்ளிவிபரவியலை பிழையாகக் கூறுவதும் வீடியோவில் தரப்பட்டுள்ளது. இந்த கட்சி நிரப்பிய வேட்புமணுப் படிவங்களில் பிழைகள் இருந்திருக்கலாம். அவற்றை யாழ் பதில் அரசஅதிபர் மூடி மறைத்து அனைத்தையும் செல்லுபடியானதாக மாற்றியிருக்கலாம் சந்தேகம் நிலவுகின்றது.

